LIVE

Sunday, December 16, 2018


டிசம்பர் 17 
ஓய்வூதியர்கள் தினம்
===============================
தோழர். ஆர். பட்டாபிராமன் 
NFTE மேனாள்  மாநிலச் செயலர்.
அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறிப்பாக பி எஸ் என் எல் ஓய்வூதியர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்
டிசம்பர் 17   பென்சனர் தினம் சம நிலைக் கோட்பாட்டை முக்கியச் செய்தியாகக் கொண்டுள்ளது. முன்னாள் பென்ஷனர்கள்குறிப்பிட தேதிக்கு பின்னரான பென்ஷனருக்கு  இணையாக, ஓய்வூதியத் திருத்தம் பெற உரிய இணைப்பை  அது நல்குகிறது.  'ஒரே ரேங்க் எனில் ஒரேவகை பென்ஷன் பெறத்தகுதிஎன்பது நியாயமான ஒன்றாகவும் ஏற்கப்பட்டுள்ளது.

இச்சூழலில்டீலிங்க் -இணைப்பைத் துண்டிஎனக் கோரிக்கை உருவாகியிருப்பது  துரதிருஷ்டம் என எண்ணத் தோன்றுகிறது. முன்னாள் பென்ஷனரை  உயர் ரேங்கில் வை என்பதாகவும் ஆகிவிடுகிறதுஉள்ளார்ந்து பார்த்தால் சமதையாக நடத்தப்படவேண்டியவர்கள் வித்தியாசப்படுத்தப்படலாம் என்கிற  பொருளையும் தருகிறது.
ஊதிய மாற்றம் என்பது  சேவையில்  தொடரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வைத் தரும் போதேஊதியமாற்ற தேதிக்குப் பின்னர் பென்ஷனராக மாறியவருக்கு, பென்ஷன் திருத்தத்தையும் ஊதிய உயர்வு காரணமாகவே தருகிறது.
இந்த கேட்டகரி பென்ஷனர்கள்தான்  அவர்கள் பெறும் பென்ஷன் திருத்தம் காரணமாக முன்னாள் பென்ஷனருக்கு பென்ஷன் திருத்தம் பெறுவதற்கான இணைப்பைத் தருகிறார்கள். (சம்பள மாற்ற ஊழியர்கள் அனைவருமல்லர்).
இந்த  நிலைப்பாட்டையே ஊதியக் குழுக்கள் மாடிபைடு பாரிட்டி கோட்பாடு என அழைக்கின்றன. இந்த அடிப்படையில் தான் சம்பள குழுக்கள் (5,6,7) ஊதிய மாற்றத்தையும், இரு கேட்டகரி பென்ஷன் திருத்தங்களையும் செய்திருக்கின்றன. இன்றைய சூழலில் பி எஸ் என் எல் -ல் இருந்து ஓய்வு பெற்ற  பென்ஷனர்கள் அவர்களுக்கானஇணைப்பு எதிர்கால பென்ஷனரைபி எஸ் என் எல்- இருந்தே பெறவேண்டும்- மத்திய அரசு எதிர்கால பென்ஷனரிடமிருந்தல்ல.

1 comment:

  1. Com.Siva
    சமதர்ம சமுதாயம் காண களமும் இது ஒறன்றென கையாளும் தங்ளுக்கு என் மனமார்ந்த நன்றி. வணக்கம்.
    N.Natarajan. Tnj.

    ReplyDelete