LIVE

Friday, October 26, 2018

தஞ்சை மாவட்ட 
புதிய வலைதளம் துவக்கம் 
==================================

அன்புத் தோழர்களே! தோழியர்களே!!
     அனைவருக்கும் வணக்கம்! நமது AIBSNLPWA சங்கம் அகில இந்திய அளவில் வெகு சிறப்பாக செயல்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே!  இந்த அமைப்பு  அகில இந்தியாவிலேயே முதன்முதலாக தஞ்சையில்தான் துவங்கப்பட்டது. அதன் பொதுச் செயலாளர் நமது இன்றைய தஞ்சை மாவட்டச் செயலர் தோழர். V. சாமிநாதன் அவர்கள்தான். 

        இன்றைக்கு அது  தேசம் முழுதும் பல மாநிலக் கிளைகளைக் கொண்டு மிகப் பெரிய சங்கமாக வளர்ந்து வருகிறது.

     இதனுடைய செயல்பாடுகள் சிறக்கவும்,  உறுப்பினர்களிடம் செய்திகளை விரைவாக கொண்டு செல்லவும்  ஊடகம் அவசியமானதொன்றாகிவிட்டது. அதனடிப்படையில் நமது மாநிலத்தில் நான்கைந்து மாவட்டங்கள் வலைத்தளம் துவங்கி செயல்படுகிறது. 

          நமது மாவட்டத்தில் வாட்சப் குழு உருவாக்கி அதன் மூலம் செய்திகளை உறுப்பினர் மத்தியில் கொண்டு செல்கிறோம்.  இதை, தஞ்சை முழுமைக்கும் மாவட்டத் துணைத் தலைவர் திரு. சந்தானகோபாலன் அவர்கள் போட்டோ பதிவு, வீடியோ பதிவு, செய்திகள் என்று அவற்றை உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார். 

               பட்டுக்கோட்டை பகுதிக்கு மட்டும் ஒரு வாட்சப் குழு அமைத்து 
அதை தோழர். S. சிவசிதம்பரம் பதிவிட்டு வருகிறார். 

           இதன் அடுத்த கட்டமாக நமது மாவட்டத்திற்கு தனி வலைத்தளம்
ஒன்றை நாம் துவங்க எண்ணுகிறோம்.  

        அதற்கான ஏற்பாட்டைச் செய்து பரீட்சார்த்தமாக பதிவிட துவங்குகிறோம். டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர்.  ஜி.நடராஜன்  சென்னை அவர்கள் தஞ்சை மாவட்ட வலைத்தளத்தை துவக்கி வைக்கவிருக்கிறார்கள். 

                  இந்தப்  பணியைச்  செய்திட  மாவட்டச்  செயலர்  தோழர்.  V. சாமிநாதன் அவர்கள் 13-10-2018 அன்று நடைபெற்ற செயற்குழுவில் என்னைப் பணித்திருக்கிறார். 

       இதைச் செவ்வனே செய்ய நீங்கள், உங்கள்  ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எனது வாட்சப் எண்ணில் ( 94861 09185 ) பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்.
94861 09185.