LIVE

Tuesday, December 24, 2019

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த 
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 
அன்புடன்,
உங்கள் V. சாமிநாதன்.

Thursday, December 12, 2019

ஓய்வூதியர் தின சிறப்புப் பொதுக்குழு 





Wednesday, August 14, 2019

அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்!

Saturday, August 3, 2019

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கம்.
தஞ்சாவூர்.
====================================================
அகில இந்தியச் சங்க  அமைப்பு தினம்  
பத்தாம் ஆண்டு சிறப்புக் கூட்டம்.
[ 20-08-2009 ]
======================================
10-08-2019 சனிக்கிழமை காலை 10 மணி 
மேரிஸ் கார்னர் தொலைபேசி இணைப்பகம்.
====================================================
தலைமை: சமூக ஆர்வலர்
 தோழர். மதுரை ராஜேந்திரன் அவர்கள் 
மாவட்டத் தலைவர்.

முன்னிலை தோழர்கள்: 
A. K. தனபாலன் மற்றும் S. பிரின்ஸ் செயல் தலைவர். 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 
தோழர். க. அய்யனார் அவர்கள்.

வரவேற்புரை 
தோழர். எஸ். சிவசிதம்பரம் 
பட்டுக்கோட்டை.

துவக்கவுரை;
தோழர். V. சாமிநாதன் அவர்கள்,
மாவட்டச் செயலாளர்.

சிறப்புரை: தோழர்கள் 

N. வீரபாண்டியன் அவர்கள்
சிறப்பு ஆலோசகர், பட்டுக்கோட்டை.

S. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 
மாநில அமைப்புச் செயலர், தஞ்சாவூர். 

T. முருகேசன் அவர்கள்,
மாநில துணைப் பொருளர்.
திருவாரூர்.

C. V. தங்கையன் அவர்கள்
பட்டுக்கோட்டை 

நன்றியுரை 
தோழர். K. சீனு அவர்கள் 
மாவட்டப் பொருளாளர்.
================================================================
தோழர்கள், தோழியர்கள் தவறாது பங்கு கொண்டு 
நிகழ்ச்சியை சிறக்கச் செய்யுமாறு 
அன்போடு வேண்டுகிறோம்.
===================================================================
சங்கப் பணியிலும், சமுதாயப் பணியிலும் 
என்றும் முனைப்பாய் நிற்கும் நமது 
தஞ்சை மாவட்டச் சங்கம் 
உங்களை அன்போடு வருக! வருக!! வென 
 வரவேற்று மகிழ்கிறது!!
===================================================================

Monday, July 29, 2019

               சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் 
 28-07-19 - தஞ்சை.
==========================================
தஞ்சை ராஜசேகரன் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமையில் மாலை 4 மணிக்கு சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்டச் செயலர் தோழர். சாமிநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். 
தோழர். வீரபாண்டியன் அவர்கள் 
துவக்கவுரையாற்றினார். 

ஓய்வூதிய மாற்றம், MRS மற்றும் இன்றைய BSNL என்ற தலைப்பில் சிறப்பானதொரு விளக்கவுரையினை அகில இந்திய துணைத் தலைவர் தோழர் D.G அவர்கள் ஆற்றினார்.
ஒன்றரை மணி நேரம் கூட்டத்திற்கு வந்திருந்த 300 பே ரையும் கட்டிப் போட்டார் தலைவர். 

அவருடைய முழு உரையும் ஆடியோ பதிவாக விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.

 



Thursday, July 25, 2019

நீண்ட நாள் கோரிக்கை வெற்றி!
===========================================================
அகில இந்திய தலைவர்கள் D.G, கங்காதரராவ், 
மாநிலச் செயலர் தோழர். RV, மற்றும் தஞ்சை
GM திரு. வினோத் ஆகியோருக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றி! 
============================================================

AIBSNLPWA தஞ்சை மாவட்டச் சங்கத் தோழர்களின் இரண்டு 
சிக்கலான பென்சன் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

1
அய்யம்பேட்டை தோழர். பிச்சையன் TM அவர்களின் மனைவிக்கு இன்றைக்கு பென்சன் உத்தரவாகி நிலுவைத் தொகை ரூ. 15,65,000/- வழங்கப்பட்டுள்ளது.
பிச்சையனுக்கு 1984 ல் திருமணம். மகன் பிறந்த 4 மாதத்திலேயே மனைவி இறக்க, 85 ல் மறுமணம் செய்கிறார். 86 ல் TM ஆக வேலை பார்க்கிறார். 2வது மனைவிக்கு 6 குழந்தைகள். 2012 ல் பிச்சையன் இறந்து விடுகிறார்.
அப்போது 33 வயதான முதல் மனைவியின் மகன் இந்தப் பென்ஷன் தொகையில் சமமான பங்கு வேண்டும் என்று வழக்கு போடுகிறார். கேபிள் டிவி தொழில் நடத்திக் கொண்டிருக்கும் இவரது மனைவி வல்லத்தில் ரெவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கிறார்.  முதல் மனைவியின் இறப்புச் சான்றிதழ் பெறமுடியாத நிலையில் நம்ம GM ஆல் பென்ஷன் பேப்பர் அனுப்ப முடியவில்லை. அதற்கு பல முட்டுக்கட்டைகளைப் போடுகிறார் முதல் மனைவியின் மகன்.

அந்த அம்மாவுக்காக நமது GM அவர்கள் RDO வுக்கு கடிதம் எழுதி புகார் செய்த பின்தான் இந்தச் சான்று கிடைக்கிறது. அதற்குப் பிறகு GM சான்றளித்து, பென்சன் பேப்பரை அனுப்பினால் கோர்ட் கேஸை முடித்து வாருங்கள் என்று பதில் வருகிறது. முதல் மனைவியின் மகன் கேஸை டிரையலுக்கு வராமலேயே இழுத்தடிக்கிறார்.  அப்போது நான் அந்தப் பையனிடம் சென்று சமாதானம் பேசிப் பார்த்தேன். முடியவில்லை. 

பின்னர் நாம் நடத்திய மகளிர் தின விழாவிற்கு நமது அகில இந்திய துணைத் தலைவர் DG அவர்களும் GM அவர்களும் வந்திருந்தார்கள். அதில் GM அவர்கள் பேசியபோது, மேற்படி கேஸ் பற்றி சுட்டிக் காட்டி 6 குழந்தைகளோடு கைம்பெண்ணாக வாழும் மனோன்மணி என்ற பெண்ணுக்கு நடந்த அநியாயத்தை விவரித்து, இதை இங்கு வந்திருக்கும் திரு DG அவர்கள் மெம்பர் பைனான்ஸ்க்கு எழுதி அந்த அம்மாவுக்கு பென்ஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். நமது தோழர் மீது அவர் காட்டிய பரிவு அன்று அனைவரையும் நெகிழச் செய்தது.

உடனேயே தலைவர் DG அவர்கள் திரு. கங்காதரராவ் அவர்களிடம் கூறி அ.இ. சங்கத்தின் மூலம் கடிதம் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார். 
பின்னர் ஒருமுறை மெம்பர் பைனான்சும், DDGP லிண்டா மேடமும் பெங்களூர் வரும்போது கங்காதரராவ் இதைப் பற்றி கூறி, அழுத்தம் கொடுக்கிறார். உடனே அந்த அம்மையார் அந்தக் கேஸை உடனே முடித்து வைக்கச் சொல்லி SETTLE IMMEDIATE என்று உத்தரவிடுகிறார். பின் டெல்லி சென்று, ஏன் இந்த பென்சன் கேஸை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று 2 பேரை விசாரிக்க நியமிக்கிறார்.

அதன் பின்னர்தான் 26 ம் தேதி ஆர்டர் போடப்பட்டது. ஆனால் இந்தத் தபால் அந்த அம்மாவிற்கு செல்ல விடாமல் முதல் மனைவியின் மகனால் தடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பின்னர் நமது மாவட்டச் செயலர் சாமிநாதன் அவர்கள் போஸ்ட் மேனைச் சந்தித்து, உங்கள் நடவடிக்கை குறித்து நான் புகார் செய்வதற்குள் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்தார். பின் 2 தபால்களை  ஒரே நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின் மாநிலச் செயலர் தோழர். R.V மூலம் PPO எண்ணைப் பெற்று, பேங்கில் வாழ்நாள் சான்றிதழ் கொடுத்து கையோடு UPLOAD செய்ய வைத்தார். 

2
கீவளூர் தோழர் பாலசுப்ரமணியன் மனைவி பிரேமா. இவர் 2009 ல் இறக்கிறார். இவர் மகன் அருள்செல்வன் ஊமைப் பையன். பின் இந்த பையனுக்கு திருமணம் ஆனதால் கிடையாது என்றார்கள்.   இவருடைய கேசும் 10  ஆண்டாக இழுத்தடிக்கப்பட்டது. இதையும் அதாலத்தில் வைத்து போராடினோம்.
பின்னர் திருமணம் ஆனாலும் ஊமைப் பையன் என்றால் பென்சன் உண்டு என்று உத்தரவு வந்தது.  அதை ஒட்டி நமது முயற்சிகளை விடாது தொடர்ந்தோம். கடைசியாக இந்த 24 வது அதாலத்தில் இன்றைக்கு அது தீர்க்கப்பட்டிருக்கிறது.   இவருக்கு இன்று 10 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் நிலுவைத் தொகையாக  7,84,000 ரூபாயினை நமது சங்கம் பெற்றுத் தந்து, பென்சனை வழங்கியிருக்கிறது. 

ஒரு உதாரணத்திற்காக இந்த 2 பிரச்சினைகளை சுட்டிக் காட்டியிருக்கிறோம். நோக்கம் வேறொன்றுமில்லை. நமது முயற்சிகளைப் பற்றிய பின் புலத்தை நீங்கள் அறிந்து கொள்ளவே!

மாவட்டச் சங்கம் என்ன செய்கிறது, கேஸை ஒழுங்குபடுத்தி அதாலத்தில் எப்படி முன் வைக்கிறது, வாதிடுகிறது?

நமக்கு மதிப்பளித்து தஞ்சை GM அவர்கள் இந்த பிரச்சினையை எவ்வாறெல்லாம் கையாண்டார்?

நமது அகில இந்திய தலைவர்கள் DG, கங்காதரராவ் ஆகியோர் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்?

மாநிலச் செயலர் தோழர் RV அவர்கள் தஞ்சைப் பிரச்சினையில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்?  அதாலத்தில் நமக்காக விவாதம் செய்கிறார்?

என்பதில் உள்ள உண்மையை, உழைப்பை, அக்கறையை நாமெல்லாம் உணர்ந்திடவே இந்தப் பதிவு. யாதொரு விதமான ஆதாயமும் இல்லாமல் தினசரி சங்கத்திற்கு வந்து எத்தனை தோழர்கள், பொறுப்பாளர்கள் உழைக்கிறார்கள், கூட்டத்தை நடத்தித் தருகிறார்கள் என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும். இவைகளுக்கெல்லாம் காரணம் நமது அப்பழுக்கற்ற செயல்பாடுதான் என நான் உணர்வதால் இதைப் பதிவு செய்கிறேன்.  

தோழர்களே!
தோழர் DG அவர்கள் வருகிற 28-07-19 தஞ்சைக்கு வருகிறார். அழைப்பிதழ் பார்த்திருப்பீர்கள்.  அவசியம் வாருங்கள். தவறாது பங்கு கொண்டு சிறப்பியுங்கள்.

வாழ்த்துக்களுடன்,
V. சாமிநாதன்,
மாவட்டச் செயலர்,
AIBSNLPWA, தஞ்சை.

Sunday, May 19, 2019


Dear Comrades,
STR Division Secretary and ACS Com. S.Sundarakrishnan  had  been to CCA, Chennai Office where he had gathered the following important information which have  been brought forward for your info. 

Due to  implementation of SAMPAN, pension payments are directly made by CCA to those who retired since 28.02.2019.  Advantage of this is Pension is paid promptly on the 1st day of next month. Settlements are done within 20 days. PPO Sheet (no book) is  sent directly .They have to take printout. Hard copies will be sent up to few months .In due course of time hard copies will not be sent. These are all for superannuation retirees. I requested to implement the similar status for VRS and death cases also. When I was at CCA Office, one of the female pensioners retired during APRIL came showing that she has been shown as MALE GENDER instead of FEMALE. In the PPO, Corrections cannot be done at CCA level. It has to be sent to HQRS and they only correct. If DATA feeding is done at BSNL in SAMPAN software individual can check the spelling and correctness of data. BSNL is not feeding data in SAMPAN Software. So, comrades who retired since 28.2.2019 are requested to check all your data in PPO. In case of any correction needed, please inform AO CCA OFFICE. They will get it corrected within 3days. I told hard copies are not received by some of the retirees of February like com. MANIMEGALAI.He assured that he would  sort out the issue.

10-02-19
AIBSNLPWA தஞ்சை மாவட்ட மாதாந்திர கூட்டம்

இன்று காலை சரியாக 10:30 மணிக்கு தொடங்கிய கூட்டம் கிட்டத்தட்ட 140 தோழர்கள், தோழியர்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது
தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் ஏகே தனபாலன்  மற்றும் தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் முன்னிலையில் தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் கூட்டத்தினை சிறப்பாக நடத்தினார்
முதல் நிகழ்வாக சென்ற மாதக் கூட்டத்தில் இருந்து இந்த மாதம் கூட்டம் வரை உயிர் நீத்த தோழர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆன்மா சாந்தி அடைய இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
அடுத்து தோழியர் அருட்செல்வி கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் கே.அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்திட கூட்டத்தினை தலைவர் தலைமையேற்று தொடர்ந்து நடத்தினார். தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் தனது உரையில் புதிதாக சென்ற மாதம் ஓய்வு பெற்று நமது சங்கத்தில் இணைந்த 11 அங்கத்தினர்களையும் வரவேற்று நமது சங்கத்தின் வழிமுறைகளையும் விளக்கி உரை நிகழ்த்தி அமர்ந்தார்
அடுத்து தோழர் கே டி கௌரவத் தலைவர் கூட்டத்தில் பங்கு பெற்றவர்களை வாழ்த்தி உரையாற்றியமர்ந்தார்
அடுத்து தோழர் என் நடராஜன் அவர்கள் நடப்பு பென்சனர் பத்திரிக்கையில் வந்த முக்கிய செய்திகளை தனது உரையில் அறிவித்து அமர்ந்தார்
அடுத்து தோழர் கே. சந்தானகோபாலன் துணைத் தலைவர், மாவட்ட மாநில அகில இந்திய நடப்புகளையும் செய்திகளையும் மற்றும் தற்போதைய சாம்பன், ஐடிஏ,எம் ஆர் எஸ் மற்றும் pension ரிவிஷன் பற்றியும் நமது மாவட்ட சங்கத்தின் சிறப்புகள் பற்றி நமது கங்காதர்ராவ் அவர்களால் பென்ஷனர் பத்திரிக்கையில் தொகுத்தளிக்கப்பட்ட தஞ்சை உலக மகளிர் தின கொண்டாட்ட சிறப்பு பதிப்புகளை  கூட்டத்தினருடன் பகிர்ந்துகொண்டு உரையை நிறைவு செய்தார்
அடுத்து தோழர் என் பாலசுப்பிரமணியன் 2 அவர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்
பிறகு தோழர் இளங்கோவன் மற்றும் தோழர் ராஜாராமன் சென்ற மாதம் ஓய்வுபெற்று இந்த மாதம் நமது சங்கத்தில் இணைந்தது குறித்து நமது சங்கத்தின் செயல்பாடுகளை சிலாகித்து பேசி அமர்ந்தனர்
சென்ற மாதம் ஓய்வுபெற்ற 11 அங்கத்தினர்களின் மணி விழாவும் இந்த மாதம் பிறந்தநாள் அமைந்திட்ட தோழர் தோழர்களின் பிறந்தநாள் விழாவும் வழக்கம்போல் சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு விண்ணதிர வாழ்த்து கோஷங்களுடன் மிகவும் இனிமையான சந்தோஷமான ஒரு சூழ்நிலையில் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது
இறுதியாக தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.நிறைவேறியது. இன்றைய கூட்டத்தின் மதிய விருந்து தோழர் ராஜாராமன் ரிட்டயர்டு  டிஜிஎம் அவர்களால் வழங்கப்பட்டது.

தோழமை வாழ்த்துக்களுடன்,
வி .சாமிநாதன்,
மாவட்ட செயலர்,

தஞ்சை மாவட்டம்.

கூட்ட நிகழ்வு காட்சிகள்:





























Sunday, April 14, 2019


AIBSNLPWA தஞ்சை மாவட்டம். 
மாதாந்திர கூட்டம் - 13-04-19
=======================================================
அன்பு தோழர்களே, தோழியர்களே, அனைவருக்கும் வணக்கம்! .
      காலை சரியாக பத்து முப்பது மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் சுமார் 150 தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்ட மாதாந்திரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க. தோழர் வி.சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நடத்த, தோழர் ஏ.கே. தனபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட, தோழர் க.அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். 
தோழர் பிரின்ஸ்  செயல் தலைவர், தோழர் ஏ.கே. தனபாலன் கௌரவ தலைவர் மற்றும் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் சங்க செயல்பாடுகள் பற்றி வாழ்த்தி பேசினார்கள். தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் வருகின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் 1968 போராட்டத்தில் பங்குபெற்று விழுப்புண் பெற்ற தோழர்கள், தோழியர்களை வருகின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் சிறப்பிப்பது பற்றியும், நமது மாவட்ட சங்க ஓய்வூதியர் கதிரவன் இருபத்தைந்தாவது பதிப்பு அடுத்த மாதம் வெள்ளி விழா கொண்டாட்டமாக அமைய இருப்பதால், அதற்கு நமது தோழர் கே. முத்தியாலு  மத்திய சங்க துணைத் தலைவர், அவர்களை அடுத்த பொதுக்கூட்டத்திற்கு அழைத்து சிறப்பாக நடக்க இருப்பதாக அறிவித்தார்கள். மற்றும் இன்றைய மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றியும் சிறப்பாக உரையாற்றி நிறைவு செய்தார். 
தோழர் கே. சந்தானகோபாலன் மாவட்ட  துணைத் தலைவர் அவர்கள் தற்போதைய ஐடிஏ, எம் ஆர் எஸ் பேமெண்ட் பற்றியும், சாம்பென் பற்றிய செய்திகளையும், நமது ஓய்வூதிய மாற்றத்தின் இன்றைய நிலையைப் பற்றியும், நமது சங்கத்திற்கு நிலுவை இல்லாமல் சந்தா செலுத்த வேண்டிய அவசியத்தையும், மாவட்ட சங்கத்தின் மாண்புகளையும், அது திறம்பட செயல்படுகின்ற விதத்தினையும், மற்ற கிளைகளுக்கு முன்னுதாரணமாய் நாம் நடப்பது பற்றியும் சிறப்பானதொரு உரையாற்றி நிறைவு செய்தார். 
தோழர் எம் இருதயராஜ் ஆன்மீக, மருத்துவ குறிப்புகளை பகிர்ந்தார். பிறகு இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியர்களின் பிறந்தநாள் விழாவும், சென்ற மாதம் ஓய்வு பெற்ற 3 தோழர்களின் 
மணி விழாவும் வழக்கம்போல் சந்தன மாலை அணிவித்து, ஆளுயர ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டு, கேக் வெட்டப்பட்டு, அவரவர் குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்த்து கோஷங்கள் முழங்க, இனிதாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
மணி விழா கொண்டாடிய தோழர் மோகன் மற்றும் தோழர் மேகநாதன் தங்களது ஏற்புரையில் நமது சங்கத்தின் செயல்பாட்டினை பற்றி சிலாகித்து பேசி தங்களது மகிழ்ச்சியினை குடும்பத்தினருடன் பதிவு செய்தனர். தோழியர்  மல்லிகா சுகுமாரன் சென்ற மாதம் நடைபெற்ற உலக மகளிர் தினத்திற்கு ஒத்துழைத்த அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். 
முடிவாக எம் கணேசன் அலுவலக செயலர் நன்றி நவில, மதிய விருந்துடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது. 
தோழர் கே சந்தானகோபாலன் துணைத் தலைவர் விழாவின் புகைப்படங்கள் தொகுப்பினையும், விழா காணொளியையும் தயாரித்து நமது சங்கத்தின் சார்பாக பதிவு செய்தார்கள்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
தஞ்சை மாவட்டம்