LIVE

Sunday, January 13, 2019


இன்று மதியம் சரியாக 2:30 மணி அளவில் இந்த ஆண்டிற்கான முதல்  செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எம்ராஜேந்திரன் தலைமையில்நடைபெற்றது.
40க்கும் மேற்பட்ட தோழர்களும், தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
மாவட்ட செயலர் தனது முன்னுரையில் வருகின்ற 14-3-2019 வியாழக்கிழமை தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கல்லுகுளம் பகுதியில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில், நடைபெற இருக்கும் உலக மகளிர் தினம், மத்திய சங்க தலைவர்கள் பாராட்டு விழா, மற்றும்  உறுப்பினர்கள் குடும்ப விழா நடத்துவது பற்றியும், அது சம்பந்தமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்காக இந்த செயற்குழு கூட்டம் கூட்டியிருப்பதாகவும் அங்கத்தினர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளை கூறுமாறு அழைப்பு விடுத்தார்.  மாவட்ட தலைவர்கௌரவத் தலைவர்செயல் தலைவர்மாநில சங்க அமைப்பு செயலாளர், மாநில சங்க துணைப் பொருளாளர் மற்றும் கூடியிருந்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்
தோழர்கள் பிரின்ஸ், பி எஸ் மூர்த்திஅய்யனார்சிவசிதம்பரம்தோழியர் செந்தாமரை, பத்மினி, மல்லிகா சுகுமாரன் ஆகிய உறுப்பினர்களை கொண்ட திட்டமிடுதல் குழுவை அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு செயலர் சாமிநாதன்  அமைத்தார்

வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாம் சனிக்கிழமை நடக்கின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் குழந்தைகளுக்கான போட்டிகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தவிரவும் 14-3-2019 அன்று காலையில் நமது மத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மகளிர் தின விழா நடத்துவது என்றும், மதிய உணவிற்குப்பின் சென்ற 19-9-1968 ல் நடைபெற்ற பெருமைமிகு போராட்டத்தில் பங்கு பெற்றவர்களை சிறப்பிப்பது மற்றும் குடும்ப விழாவிற்கான போட்டிகளை நடத்தி சிறப்பாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது

உறுப்பினர்கள் விழாவிற்காக தாமாக முன்வந்து நன்கொடைகளை வழங்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது
மன்னார்குடி தோழர் கலியமூர்த்தி அவர்கள் ரூபாய் 501 முதன்முதலாக நன்கொடை கொடுத்து ஆதரவு நல்கினார்
தோழர் கைலாசம் ஒரு போட்டிக்கான 3 பரிசுகளை தான் தருவதாக உறுதியளித்தார்

இந்தக் கூட்டம் சம்பந்தமான முடிவுகளை அவ்வப்பொழுது குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து வழி வகுத்திட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக தோழர் K. சீனு மாவட்ட பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது

தோழமையுடன்
வி. சாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
தஞ்சை. AIBSNLPWA - தஞ்சை மாவட்டம்.
மாதாந்திரக் கூட்டம் - 12-01-19 

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் தோழர் எம். ராஜேந்திரன் தலைமை ஏற்க, தோழர் .கே. தனபாலன் கௌரவத் தலைவர், தோழர் பிரின்ஸ் செயல் தலைவர், தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர், தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க தோழர் வி.சாமிநாதன் மாவட்டச் செயலர் முன்னின்று கூட்டத்தை வழி நடத்தினார்
முதலில் தலைவர்  திருக்குறள் வாசிக்க, தோழியர்   சாரதா  சந்தானகோபாலன் கடவுள் வாழ்த்து பாட, தோழர் பி. எஸ். மூர்த்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்
140 தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். அடுத்து தோழர் கே சந்தானகோபாலன் உபதலைவர்  மாவட்ட, மாநில, அனைத்திந்திய செய்திகளை தொகுத்து வழங்கினார். தனது உரையில் சென்ற மாதம் நடந்த மாவட்ட மாநாடு, பென்சனர் தின கொண்டாட்டம், ஆங்கில புத்தாண்டில்  தஞ்சை ஜிஎம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டது,  IDA உயர்வு 3.2%, எம் ஆர் எஸ் தற்போதைய நிலை, SAMPENN Software மற்றும் CPMS செயல்பாடு பற்றியும், அதன் சாதக பாதகங்களை பற்றியும், IIMஅகமதாபாத் Interim ரிப்போர்ட் பற்றியும் மாவட்ட whatsapp குரூப்பில் எப்படி விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விளக்கி சிறப்புரை
ஆற்றினார். 
தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் மகளிர் தின விழாவைப் பற்றியும், சிறப்பு விருந்தினர்கள் அழைப்பது பற்றியும், சங்க சந்தாவை தவறாமல் அளிக்க வற்புறுத்தியும் உரையாற்றினார்கள்
தோழர் .கே. தனபாலன் கௌரவத் தலைவர் நமது சங்க புது நிர்வாகிகளை வாழ்த்தியும், நமது தஞ்சை மாவட்ட சங்கத்தின் சிறப்புகளையும், மாவட்ட செயலர் சாமிநாதனின் திறன்மிகு செயல்பாட்டினையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்
தோழர் இருதயராஜ் பொது சிந்தனை, ஆன்மீக சிந்தனை, மருத்துவ சிந்தனை, அறிவியல் சிந்தனை பற்றி உரையாற்றினார்
தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் மாவட்ட செயலர் சாமிநாதனின் திறன்மிகு செயல்பாட்டினை பாராட்டி பேசினார்
தோழர் கே எஸ் கே நமது சங்கத்தின் குறிக்கோள் பற்றியும் pension revision பெறுவதில் உள்ள இடர்பாடுகளை பற்றியும் அதை ஒற்றுமையுடன் செயல்படுத்தவேண்டிய காரண காரியங்களையும் விளக்கி வலியுறுத்திப் பேசினார்.
தோழர் நாகராஜன் pension ரிவிஷன் மற்றும் எம் ஆர் எஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை விளக்கி பேசினார்
தோழர் ராஜேஷ் நமது கூட்டத்தில் கலந்து கொள்வதில் புத்துணர்வு பெறுவதாகும், மாவட்ட செயலருக்கு தகுந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
தோழர் இளங்கோவன் அவர்கள், தலைவர் மதுரை எம் ராஜேந்திரன், கௌரவத் தலைவர் .கே.தனபாலன், மாவட்ட செயலர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் கே .சீனு, ஆகிய தோழர்களின் செயல்பாட்டினை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் .
தோழர் நடராஜன் பென்ஷன் பத்திரிக்கை பற்றியும், பட்டுக்கோட்டை கிளை புதிதாக அமைக்கப்பட்டது பற்றியும், ஏடிஎம் கார்டு செயல்பாடு பற்றியும், கேபிள் ஆப்பரேட்டர் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்வது பற்றியும், இன்கம்டாக்ஸ் பற்றியும், நாட்டு நடப்புகள் பற்றியும் விளக்கமாக பேசினார்
புருஷோத்தமன் மருத்துவ குறிப்புகளைப்  பற்றி உரையாற்றினார் தோழர் அய்யனார் இணைச் செயலர் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து நமது சங்க செயல்பாடுகள் பற்றியும், மகளிர் தினம் சிக்கனமாக சிறப்பாக நடத்துவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும்  கூறி உரையை நிறைவு செய்தார்
தோழியர் மல்லிகா சுகுமாரன் புத்தாண்டு பொங்கல் தின வாழ்த்துக்கள் கூறி அனைத்து புதிய நிர்வாகிகளையும் வாழ்த்தி உரையாற்றினார். மாவட்ட செயலர் சாமிநாதன் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் தோழர் நாடிமுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தோழர் பஞ்சாபிகேசன் மனம்விட்டு  சிரித்தால் நோய்கள் விடுபட்டுப் போகும், கவலைகளை மறந்து சிரித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது பற்றி உரையாற்றினார். 
அடுத்து மாவட்ட செயலர் சாமிநாதன் pension revision எம் ஆர் எஸ் இரண்டிலும் நாம் அனுபவபூர்வமாக பெற்று வரும் சிக்கல்களையும் அதை நாம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். 
அனைவரும் வருகிற ஏப்ரல் 1 லிருந்து வித்தவுட் வவுச்சரிலிருந்து வித் வவுசருக்கு ஆப்ஷன் கொடுத்தால் நலம் பயக்கும் என்றும் வருகிற 14 3 2019 அன்று நடைபெற இருக்கிற மகளிர் தின விழாமத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பி எஸ் என் எல் குடும்ப நல விழா பற்றியும் சிறந்ததொரு உரையாற்றினார்.
பிறகு இந்த மாதம் பிறந்தவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் சென்ற மாதம் ஓய்வுபெற்ற தோழரின் மணிவிழா ஆகியன வழக்கம்போல் கேக் வெட்டி, ரோஜா மாலை, சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு வாழ்த்து கோஷங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் நன்றி நவில கூட்டம் மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை உணவுடன் இனிதே நிறைவுற்றது

வாழ்த்துக்களுடன்,
வி .சாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
தஞ்சை.

Friday, January 11, 2019


கஜா புயல் நிவாரண நிதி 
தோழர்களுக்கு நன்றியும் பாராட்டும்!! 
=======================================
நமது தஞ்சை மாவட்டத்தின்  சார்பாக 
கஜா புயல் நிவாரண நிதியாக ரூபாய்  1,11,741/- 
நமது தோழர்கள் அளித்துள்ளனர்.

கஜா புயலால் கடும் பாதிப்புக்கு ஆளான நமது மாவட்ட மக்களின்   துயர் துடைக்க நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது சார்பாகவும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினையும்  பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது மாநிலச் சங்கம் 8 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்களை வாரி வழங்கி, நம் மாவட்ட மக்களைக் காத்ததையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்!!

அன்புடன்,
வி. சாமிநாதன்,
 மாவட்ட செயலர்,
 தஞ்சை.

Tuesday, January 8, 2019

தஞ்சை மாவட்டத்தின் 
முதல் கிளை துவக்க விழா 
==================
புதிய உதயம் பட்டுக்கோட்டை.
=============================
கடந்த 07-01-2019 அன்று பட்டுக்கோட்டையில் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.  எளிமையாக நடந்த இந்த விழாவிற்கு தோழர். N. வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
நமது மாவட்டச் செயலர் தோழர். வி. சாமிநாதன், மாநில அமைப்புச் செயலர் தோழர். பிரான்சிஸ் சேவியர், மாவட்ட அலுவலகச் செயலர் தோழர். M. கணேசன் மற்றும் பட்டுக்கோட்டை தோழர்கள், தோழியர்கள் 21 பேர் பங்கேற்றனர்.   
மாவட்டச் செயலர் தோழர் சாமிநாதன் அவர்கள் ஓய்வூதியர் நாளைப் பற்றி எடுத்துக் கூறினார். D.S. நகாராவை நினைவு கூர்ந்தும், அந்தப் பென்ஷனை அரசுப் பென்ஷனாக உறுதி செய்த தலைவர்கள் தோழர். O.P குப்தாவும், வள்ளிநாயகமும்தான் என்பதை நன்றியறிதலோடு எடுத்துக் கூறினார்.  மார்ச்சில் நடைபெறவிருக்கும் மகளிர் தின விழா முப்பெரும் விழாவாக நடக்கவிருப்பதையும், அதில் பொதுச் செயலாளர் கங்காதரராவ், மத்திய சங்க துணைத் தலைவர் தோழர். 
D. கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழாவும், ஓய்வூதியர் குடும்ப தின விழா நடத்தவிருப்பதையும் எடுத்துக் கூறினார். இது பற்றிய உங்களின் சிந்தனைகளை 12-01-19 ல் நடக்கும் அவசர செயற்குழுவில் பகிர்ந்து கொள்ளவும் வேண்டினார். 
மாநில அமைப்புச் செயலர் தோழர். சேவியர் அனைவரையும் வாழ்த்தி, கூட்டங்களில் இன்னும் அதிகம் பேர் பங்கேற்பதும், கிளை பிரச்சினைகளை உடனுக்குடன் மாவட்டச் சங்கத்திற்கு தாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். 
மாவட்டச் சங்க பொறுப்பாளர் தோழர். கணேசன் அவர்கள், தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், ஒற்றுமையோடு கிளையை நடத்திச் செல்லுங்கள் என்றும்  வாழ்த்தினார்.
கூட்டத்தில் தோழர்கள் வீரபாண்டியன், லட்சுமணன், தங்கையன், நல்லதம்பி பிரபாகரன், சுந்தரராஜன், நாடிமுத்து ஆகியோரும் பேசினர். 
இறுதியாக கீழ்க்கண்ட தோழர்கள் பட்டுக்கோட்டை கிளையின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
புதிய செயலர் தோழர். நாடிமுத்து நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

புதிய நிர்வாகிகள் பட்டியல் 

தலைவர்                                 : ஆர். ராஜேந்திரன் DGM

துணைத் தலைவர்கள்           : M. பிரபாகரன்.
                                                  V. தனராஜ் 

செயலர்                                 :  C. நாடிமுத்து PVN

துனைச் செயலர்கள்             : C. சுந்தரராஜன் 
                                                 G. ஹரிஹரன் 
பொருளர்                              : K. பன்னீர்செல்வம் 

துணைப் பொருளர்               : R. விஸ்வலிங்கம் MKR
அமைப்புச் செயலர்கள்         : N. ரவிச்சந்திரன் PVN
                                               : A. நாகராஜன் MKR
செயற்குழு உறுப்பினர்கள்    : A. சுப்பையன் PVN
                                                 M. ராஜேந்திரன் ARP 
                                                 G. சுதந்திராதேவி 
                                                 காலாவதி கருணாகரன்                      
                                                  V. தங்கராஜு TCB Sunday, December 30, 2018

இன்று போகும் 2018 நன்று பல செய்தது. 
வரப்போகும் 19 நன்று மட்டும் செய்யட்டும்.

தோழர். N. நடராஜன் அவர்கள்,
மாவட்டச் சங்க இதழ் "கதிரவன்" ஆசிரியர் குழு.
===========================================
இயற்கையின் சீற்றமும் 
இன்னபிற வினைகளும் 
பூமித்தாயின் மேனியில் 
உருவான வடுக்களுக்கும்  
காரணமான பதினெட்டே 
வருந்தி வழியனுப்பு கின்றோம்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் 
குண்டினை கண்டுபிடித்தாய்.
வடகொரியா - அமெரிக்காவின் 
பதட்டத்தையும் தனித்திட்டாய்!
செவ்வாயில் கால் பதித்து 
அறிவியலின் உச்சம் தொட்டாய்,

புவி வெப்ப மயமாதல்  
கூடாது ன்பதாலே
மரபு சாரா எரிசக்தி மாறுதலும்,
மறு சுழற்சி மகத்துவத்தால்
நாடு, நகரம் சுத்தமும்,
வேலைவாய்ப்பை தரவல்ல
விவேகத்தை உருவாக்கும் 
இரண்டாயிரத்து பத்தொன்பதே!
உன்னை நாங்கள் வரவேற்கின்றோம் !

கொடுமையான வறட்சியும் 
கடுமையான உற்பத்தியும் 
விவசாயிகளை வதைக்கிறதே!
வரும் ஆண்டில் இதற்கொரு 
வழியினைச் சொல்வாயா!

அரசியலில் ஆச்சரியங்களும்,
மடை திறந்த மாற்றங்களும் 
மகிழ்ச்சியைத் தந்திடவே 
மகிழ்ந்தளிப்பாய் புத்தாண்டே!

Sunday, December 23, 2018கடையனுக்கும் கதி மோட்சம் !
============================================================
தோழர். N. நடராஜன், AIBSNLPWA
தஞ்சை மாவட்டச் சங்க இதழ் ' கதிரவன் ' ஆசிரியர்குழு.
===============================================================
ஏசு, காந்தி, புத்தர், நபிகள்
காட்டிய நல் வழியினிலே
எப்போ, எவர்தான், வருவோரோ!
கடையனுக்கும் கதி மோட்சம்
காட்டிவிட்டுப் போவோரோ!!

உழைக்கும் மக்கள் யாவருமே
உண்மையான உயர்வு பெற
உதவிட இங்கு உதித்திடுவாரோ!
இனம், மொழி, மதத்தாலே
எல்லை கடந்த. இந்தியாவை
மத சார்பற்ற இந்தியா என
மார்தட்டிட வைப்பாரோ!

ஊழலற்ற அரசியல் வானில்
உதயமாகும் நட்சத்திரத்தை
கண்டுணர வைப்பாரோ!
உலகமே கண்டு வியக்கும்
அறிவியல் வழி அறிஞர்களை
அணி திரட்டிக் காட்டிடுவோரோ!!

ஏழை பணக்காரன் இடைவெளி குறைய
டிஜிட்டல் டிவைடு நிலையினை
மாற்றிடவே அவதரிப்பாரோ!!
இமயம் போல் இந்தியாவை
உயர்ந்து நிற்க வழி செய்வோம்!
ஒன்றிணைந்து செயல்படுவோம்!