LIVE

Friday, March 29, 2019


DA 2.6 % உயர்வு 
01-04-2019 முதல் 
மொத்த IDA 141.4 %
01/01/2017 முதல் BSNL மற்றும் MTNLலில் பணிபுரிந்து 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் கோரி 
நமது BSNL மற்றும் MTNL ஓய்வூதியர்கள் சங்க கூட்டுக்குழு மத்திய அரசிடம் 12/02/2019 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தது. 

08/03/2019 அன்று ஓய்வூதிய இலாக்கா ஓய்வூதிய மாற்றம் பற்றி DOTயிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளது. இது சம்பந்தமாக 14/01/2019 அன்றே DOTயிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டதும்…
 DOT இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை என்பதும் 
DOTயின் அலட்சியப்போக்கை அப்பட்டமாகக் காட்டுகின்றது.

DOTயிடம் கேட்கப்பட்ட விளக்கங்கள்

01/01/2017க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்திற்கான அளவுகோல் FORMULA என்னவென்று 
DOT தெளிவாகக் குறிப்பிடவில்லை. மேலும் ஓய்வூதிய மாற்றத்தினால் உண்டாகும் நிதிச்சுமையின் அளவும் குறிப்பிடப்படவில்லை.

BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அளிக்கப்படாத காரணத்தினால் ஓய்வூதிய மாற்றம் அளிக்க வழி இல்லை என DOT கூறியுள்ளது.  இத்தகைய சூழலில் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டால் அவர்கள் வாங்கும் ஓய்வூதியம் கூடுதலாகவும், தற்போது BSNL/MTNLலில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியம் குறைவாகவும் பெறக்கூடிய சூழல் உருவாகும். அத்தகைய சூழலில் இந்த வேறுபாட்டைக் களைய DOTவசம் உள்ள திட்டம் என்ன என்பதையும் 
DOT தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே DOT மேற்கண்ட வினாக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டும் என ஓய்வூதிய இலாக்காவின் செயலர் 
DOTக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓய்வு என்பது ஓய்ந்திருப்பதற்கல்ல… 
மாறாக உரிமைகளை வாதாடிப் போராடிப் பெறுவதற்கே 
என்று முழுமுனைப்போடு போராடுவோம்.

முயற்சி திருவினையாக்கும்…
அடிமேல் அடி அடித்தால் 
அம்மி மட்டுமல்ல... அரசும் நகரும்...


Friday, March 22, 2019

  மெடிக்கல் பில் ஏப்ரல் முதல்
  வாரத்திற்குள் கிடைத்துவிடும்
  என்ற தகவல் வந்துள்ளது.
  அதற்கான முயற்சிகள்
  நடைபெறுகிறது.
  
  வி. சாமிநாதன்,
  மாவட்டச் செயலர்.
மீண்டும் நம் மண்ணில் கஜா புயல் நிவாரணம்
=======================================================================



நமது மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கொறுக்கை நடுநிலைப் பள்ளிக்கட்டிடம்  கஜா புயலின் பாதிப்பால் வேரோடு சாய்ந்த ஆலமரம் போல் சாய்ந்து வீழ்ந்தது. 
அதை சரி செய்து, புதிய கட்டிடமாக சீரமைக்கும் கூட்டு முயற்சியில் நமது சென்னை மற்றும் தமிழ் மாநில ஓய்வூதியர் சங்கம் ஈடுபட்டு புதிய கட்டிடத்தை கடந்த 17-03-2019 அன்று பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. 
இரு மாநிலச் சங்க தலைவர்கள், திருச்சி  V.P. காத்தபெருமாள் உள்ளிட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள், நமது மாவட்டச் செயலர் தோழர். வி. சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.   ஓய்வூதியர் நலம் மட்டுமல்ல சமூக நலத்திலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இப் பேருதவி.
ஏற்கனவே, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான நிவாரணப் பொருள்களை பட்டுக்கோட்டை துவங்கி வேதாரண்யம் வரை வழங்கிய நமது சங்கம் இன்று ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பில் கொறுக்கை கிராம பள்ளிக்கட்டிடத்தை தேர்ந்தெடுத்து சீரமைத்துத் தந்தது நமக்கு பெருமையாக உள்ளது.  குழந்தைகளின் கல்வி நலனிலும் நமது இயக்கம் ஈடுபட்டு செய்த இச் செயல் அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்படும்போது செயற்கரிய செயலைச் செய்த நமது சங்கத்தின் தலைமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

வாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.







சிறப்பாக நடைபெற்ற விழாவில் அப் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் நன்றியை பாடல் மூலமாகவும் கவிதை மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர் . 
எட்டாவது வகுப்பில் பயிலும் மாணவி ஜெனிதா அளித்த கவிதையினை உங்கள் பார்வைக்கு: 

 பத்திரிக்கைச் செய்திகள்:


















Wednesday, March 20, 2019

AIBSNLPWA 
தஞ்சை மாவட்டச்  சங்கம் 
நடத்திய முப்பெரும்விழா!
===========================

அன்பு தோழர்களே, தோழியர்களே! 14-03-19 அன்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி, 
உலக மகளிர் தின விழா 2019, 
மத்திய மாநில மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியர் குடும்ப விழா என்று  முப்பெரும் விழாவாக தஞ்சை பேராலய மக்கள் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 550க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு சிறப்பித்தது சிறப்பு.  இந்த முப்பெரும் விழாவில் மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் பி. கங்காதர ராவ், பொதுச்செயலர் பெங்களூரு, தோழர் டி. கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர், மற்றும் செயலர் ஆசியக் கண்டம் TUI (pensioners & Retiree) சென்னை, தோழர் ராமாராவ் மாநிலத் தலைவர், தோழர் கனகராஜ் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். திரு. சி.வி. வினோத் ITS முதன்மை பொது மேலாளர், பிஎஸ்என்எல் தஞ்சை அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சரியாக காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. 
தோழர் எம். ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தலைமை ஏற்க, 
தோழர் ஏ .கே. தனபாலன் கௌரவத் தலைவர் முன்னிலை வகிக்க, தோழியர் சிவசங்கரி கடவுள் வாழ்த்து இசைத்திட விழா இனிதே ஆரம்பம் ஆகியது. 
முதல் நிகழ்வாக சென்ற மாதம் ஓய்வு பெற்ற 2 தோழர்களின் மணிவிழா நிகழ்ச்சியும், 
இந்த மாதம் பிறந்த தினம் கண்ட பத்துக்கும் மேற்பட்ட தோழர் தோழியர்களின் பிறந்த தின விழாவும் வாழ்த்து கோஷங்கள் முழங்க, ரோஜா மாலை அணிவிக்கப்பட்டு, கேக் வெட்டப்பட்டு அனைவருடைய பாராட்டுதல்களுடன் இனிதே நிறைவு பெற்றது.
நமது தஞ்சை மாவட்டச் செயலர் தோழர். வி. சாமிநாதன் அவர்களை கவுரவிக்கு முகமாக அகில இந்திய துணைத் தலைவர் தோழர் DG அவர்கள் ரோஜா மாலை அணிவித்து நினவுப் பரிசு வழங்கினார்.

மூன்றாவதாக தஞ்சை மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் முன்னாள் மூத்த தலைவரும், 68 போராட்டத்தில் பங்கேற்றவரும் சிறந்த தொழிற்சங்கவாதியுமான தோழர். K.S. கிருஷ்ணமூர்த்தி, 
அதேபோல் 68 க்கு முன்னர் பணிக்கு வந்து 68 போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவரும்  நமது மாநில அமைப்புச் செயலரும்,  திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் மாவட்டச் செயலருமான  தோழர். E. கனகராஜ்,  
68 போராட்டத்தில் பங்கேற்று 15 நாள் பாண்டிச்சேரியில்  சிறைவாசத்தில்  இருந்த மன்னார்குடி தோழர். ஆர். கலியபெருமாள் ஆகிய மூவரின் 50 ஆண்டு தொழிற்சங்க சேவையைப் பாராட்டி, ஆளுயர ரோஜா மாலை அணிவித்து, அவர்களுக்கு தஞ்சாவூர் தட்டு நினைவுப் பரிசாக அளித்து மரியாதை செய்யப்பட்டது. 
சிறந்த சேவையை, தொழிற்சங்கப் பணியை, களத்தில் நின்று போராடியவர்களை நாம் ஒவ்வோராண்டும் கவுரவித்து வருகிறோம்.  அந்த வகையில் இவ்வாண்டு நிகழ்ச்சி மேலும் சிறப்பாக அமைந்தது நமக்கு பெருமகிழ்ச்சி.

அடுத்து உலக மகளிர் தின விழா 2019 சிறப்பாக துவங்கியது. 
தோழர் எஸ் பிரின்ஸ் மாவட்ட செயல் தலைவர் மற்றும் 
தோழியர் மல்லிகா சுகுமாரன் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு இருவரும் தலைமை வகிக்க, தோழர் வி.சாமிநாதன் மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ்த்த விழா களைகட்டியது. 
தோழர் பிரின்ஸ் மற்றும் தோழியர் மல்லிகா சுகுமாரன் சுருக்கமாக தலைமை உரை ஆற்றினார்கள். 
பிறகு எம் குணசேகரன் AGM தஞ்சை அவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களையும் சிறப்புக்களையும் பற்றி உரையாற்றினார். தோழர்கள் பிரின்ஸ், சேவியர், டி. முருகேசன் முறையே மாநில சங்க அமைப்பு செயலாளர் மற்றும் மாநில உதவி பொருளர் ஆகியோர் விழாவினை வாழ்த்தி பேசினர். 
பிறகு திரு. சி.வி. வினோத் முதன்மை பொது மேலாளர் தஞ்சை அவர்கள் தனது உரையில் இன்றைய மகளிருக்கான சிறப்புச் செய்திகளை தொகுத்துத் தந்து உரையை நிறைவு செய்தார். 

பிறகு தோழர் பி கங்காதர ராவ் பொதுச்செயலர் மற்றும் தோழர் D. கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவர் மத்திய சங்கம் அவர்கள் இருவருக்கும் சிறப்பு மரியாதை செலுத்தும் முகத்தான் ஆள் உயர ரோஜா மாலை, பொன்னாடை, தஞ்சை பெரிய கோவில் உருவத்துடன் கூடிய சிறப்பு கண்ணாடி பேழை, ஷீல்டு, தஞ்சை தலையாட்டி பொம்மை, அசோகா, அல்வா, மற்றும் முந்திரிப்பருப்பு ஆகிய பரிசுப் பொருட்கள் கொடுத்து சிறப்பிக்கப்பட்டனர். 
முதன்மை பொது மேலாளர் மற்றும் ஏஜிஎம் பிஎஸ்என்எல் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். 
பிறகு தோழர் பி. கங்காதர ராவ் பொதுச்செயலர் மகளிர் தின சிறப்பு பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள். பிறகு தோழர் டி.ஜி, துணைத் தலைவர் அவர்கள் பழைய காலம் தொட்டு இன்றைய தேதி வரையில் உள்ள மகளிர் தின எல்லா செய்திகளையும் தொகுத்து வழங்கினார். 
அதோடு, நமது சங்கத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் பற்றியும், எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற பென்ஷன் ரிவிசனின் இன்றைய நிலை பற்றியும் தெளிவாக உரையாற்றினார்கள். முன்னதாக தோழர் வி. ராமாராவ் மாநிலத் தலைவர் சிறந்ததொரு வாழ்த்து செய்தியினை வழங்கினார்கள். மேலும் தனது உரையில் நமது  மாவட்டச் சங்கத்தின் செயல்பாட்டினை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்.  இவை  எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாக விளங்கக்கூடிய மாவட்ட செயலர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.  
தோழர் கனகராஜ் மாநில அமைப்புச் செயலர் திருநெல்வேலி அவர்களும் இதே கருத்தினை வலியுறுத்தி உரையாற்றினார்கள். இத்துடன் பகல் 1:30 மணி அளவில் காலை நிகழ்ச்சிகள் இனிதே முடிந்து வந்திருந்த 550க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்களுக்கும் இனிய மதிய உணவு பரிமாறப்பட்டது.
மதியம் 2:45 மணி அளவில் உலக மகளிர் தின கருத்தரங்கம் தோழியர் தங்கம் சேவியர் தலைமையில் துவங்கியது. 
தோழியர் எம் பத்மினி மாவட்ட இணைச் செயலர் அவர்கள் துவக்க உரை நிகழ்த்த, தோழியர் லைலா பானு, தோழர். அய்யனார், 
தோழர் சி.வி. தங்கையன் ஆகியோர் முறையே உழைக்கும் மகளிர், பெண்ணிய சிந்தனைகள், பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
பிறகு சென்ற வாரம் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி  சிறப்பிக்கப்பட்டனர். 
விழா மண்டபத்தில் நடைபெற்ற கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் முறையை முதல்,இரண்டு  மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். 
முடிவாக தோழர் கே. சீனு, பொருளாளர் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

நன்றி தோழர்களே!
தோழமை வாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர், தஞ்சை.