AIBSNLPWA
தமிழ் மாநிலச் சங்கம் வழங்கிய
மகத்தான கஜா புயல் நிவாரணப் பணி
=====================================================
திட்டமிட்டபடி 4-12-18 காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டையில்
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
8 லட்சம் ரூபாய் நிதியில்,
ஒரு குடும்பத்திற்கு 2000 ரூபாய் மதிப்பில்
15 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக மாநிலச் சங்கப் பொறுப்பாளர்களுக்கு வரவேற்பும், மாநிலத் செயலர் தோழர். RV அவர்களின் பிறந்தநாள் நடத்தப்பட்டது.நிகழ்ச்சியும் தஞ்சையில்
மாநிலத் தலைவர் வி. ராமாராவ், மாநிலச் செயலர் R. வெங்கடாசலம்,
மாநிலப் பொருளர் எஸ். காளிதாஸ், சென்னை தொலைபேசி
மாநிலச் செயலர் எஸ். தங்கராஜ், சென்னை தொலைபேசி
மாநிலப் பொருளர் கண்ணப்பன், நமது மாவட்டச் செயலர்
வி. சாமினாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுடன் தஞ்சை மேகநாதன், ஆரோக்கியதாஸ், [பன்னீர்செல்வம் ஆகியோரும் , தலைவர்
வீரபாண்டியன் மற்றும் பட்டுக்கோட்டைத் தோழர்களும் பங்கேற்று பொருட்களை விநியோகித்தனர்.
பின்னர், அதிராம்பட்டினத்தில் சிவசிதம்பரம், முத்துப்பேட்டையில் சிவசங்கரன், வேதாரண்யத்தில் வேதநாயகம், திருத்துறைப்பூண்டியில் பக்கிரிசாமி உள்ளிட்ட தோழர்களுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கி விநியோகிக்கப்பட்டது.
எவரும் வழங்கிடாத அளவுக்கும், தேவையானவற்றை தேர்ந்தெடுத்து
வழங்கியமைக்கும் ஜனங்கள் நன்றியைத் தெரிவித்து நமது அமைப்பை பாராட்டினார்கள்.
=======================================================================
வழங்கப்பட்ட 15 வகையான
புயல் நிவாரணப் பொருட்கள்
====================
அரிசி 10 கிலோ சிப்பம். 1
மிக்ஸர் அரை கிலோ. 1
ரஸ்க். '' ". 1
மேரி லைட் 10 ரூ பிஸ்கட் 1
அணில் சேமியா
பாக்கெட் 180 கிராம். 2
கொசு வலை 1
மெழுகுவர்த்தி பெரியது. 5
தீப்பெட்டி பாக்கெட் 1
நாப்கின் 1
புடவை 2
போர்வை 2
கைலி 2
பாவாடை. 2
துண்டு. 2
பாய் 1
=======================================================================
RV அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி:
நிவாரணப் பணி காட்சிகள்:
நிவாரணப் பொருட்கள் வழங்கும் காட்சிகள்: பட்டுக்கோட்டை.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் காட்சிகள்: அதிராம்பட்டினம்.


நிவாரணப் பொருட்கள் வழங்கும் காட்சிகள்:
வேதாரண்யம் & திருத்துறைப்பூண்டி.
No comments:
Post a Comment