LIVE

Wednesday, November 28, 2018

ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் 
தஞ்சை மாவட்டம். 
அவசர செய்தி. 
=======================================================

தோழர்களே தோழியர்களே! 
            அனைவருக்கும் வணக்கம். அண்மையில் நமது தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கஜா புயலினால் கடுமையான சொல்ல இயலாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. உயிரை மட்டும் வைத்து, உடமைகளை பறித்துச்  சென்ற காட்சிகளை தினம் தினம் கேட்டும் கண்டும் வருகிறோம் .இந்த கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் நாம் அனைவரும் பொருளுதவி வழங்கி அவர்களின் துயர் துடைக்க கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் நிலைமை சீராக இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். நலிவுற்ற அந்த உள்ளங்களுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி, பண உதவி மற்றும் அனைத்து வகையான உதவிகளையும் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் .நமது ஏ ஐ பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் அனைத்து பகுதியிலிருந்தும் கஜா புயல் நிவாரண நிதி வசூலித்து உதவிக்கரம் நீட்டி செயல்பட இருப்பதை கண்கூட காண்கின்றோம். இந்த வகையிலே நாமும் தஞ்சை மாவட்டச்  சங்கத்தின் உதவி கரத்தை நீட்ட கடமைப்பட்டுள்ளோம் .அந்த வகையிலே உங்கள் அனைவரையும் உங்களால் முடிந்த தொகையினை செலுத்தி இந்த புனித நற்காரியத்தில் இணையுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் .இதுவரை நன்கொடையளித்த தோழர் தோழியர்கள் விவரங்கள் கீழே கொடுத்துள்ளேன். 

தோழியர் சி  பொன்னழகு ரூபாய் 10 ஆயிரம் 
தோழியர்  ஸ்ரீ சந்திரகுமாரி  ரூபாய் 6 ஆயிரம் 
தோழர் விஜயகுமார் ரூபாய் 5 ஆயிரம் 
தோழியர் கோமதி அசோக்குமார் ரூபாய் 5 ஆயிரம் 
தோழர் பாலகுமாரன் சந்திரா ரூபாய் 5 ஆயிரம் 
தோழியர் சாரதா சந்தானகோபாலன் ரூபாய் இரண்டாயிரம் 
தோழியர் எம் பத்மினி 2000 
தோழர் எஸ் விஜயகுமார் 2000 
B.புருஷோத்தமன் ரூபாய் 1000 
தோழியர் தங்கம் சேவியர் ரூபாய் 1000 
தோழர் டி செல்லமுத்து ரூபா 1000 ஆகியோர் 
இதுவரை நன்கொடை செலுத்தியிருக்கிறார்கள் . 
இது தவிர  உண்ணாவிரத போராட்ட தினத்தில் ரூபாய் 5 ஆயிரம் தோழர் தோழியர்கள் நன்கொடை செலுத்தியிருக்கிறார்கள் .இன்னும் நிறைய தோழர்களும் தோழியர்களும் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். உதவ விருப்பமுள்ள தோழர்களும் தோழியர்களும் கொடுத்து உதவ வேண்டுகோள் வைத்து அமைகிறேன். 

தோழமை வாழ்த்துக்களுடன், 
வி .சாமிநாதன், 
மாவட்ட செயலர், தஞ்சை.

No comments:

Post a Comment