LIVE

Wednesday, November 28, 2018

உண்ணாவிரதப் போராட்டம்.
======================
      மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் இன்று 22 11 2018 ல் உண்ணாவிரதப்  போராட்டத்தை நடத்தியது. தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை சரியாக 10 மணிக்கு தொடங்கப்பட்ட உண்ணாநோன்பு மாலை 5 மணிக்கு முடித்து வைக்கப்பட்டது. சுமார் 85 தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு  கடமையாற்றினர். மழையின் காரணத்தினாலும் அண்மையில் நடந்த கஜா புயலின் பின் விளைவுகளாலும் வெளியூர் தோழர்கள் கலந்து கொள்ள இயலாத நிலை இருப்பினும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 
மாவட்ட தலைவர் தோழர் ஏ கே டி அவர்கள் உண்ணாநோன்பிற்கு  தலைமையேற்க, மாவட்ட செயலர் வழிநடத்த, மாநில அமைப்புச் செயலர் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது. முதலாவதாக தலைவர் முன்னுரை நிகழ்த்திட தோழியர் சாரதா சந்தானகோபாலன் கடவுள் வாழ்த்து பாடல் பாட மூத்த தோழர் கே எஸ் கே அவர்கள் உண்ணாநோன்பினை தொடங்கி வைத்தார். தோழர் வி. சாமிநாதன்  விளக்க உரை அளிக்க முன்னதாக மறைந்த மத்திய ரசாயன மற்றும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் மாண்புமிகு அனந்தகுமார் அவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்தப்பட, தோழர் கே. சந்தானகோபாலன் ,துணைத் தலைவர் உண்ணா நோன்பின் காரண காரியங்களை விளக்கி நாம் சாதனைகளைப் படைக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கி பேசியதோடு அல்லாமல் அண்மையில் தஞ்சை மற்றும் நாகை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் பாதித்த அனைவருக்கும் நன்கொடை மூலம் அவர்கள் தேவைக்கு உதவ வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார்.நமது மாநில மத்திய சங்கங்களும் இதற்கு உதவிட இரு கரங்கள் நீட்டி தயாராக உள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பு இன்று மாலை தெரியவரும் என்று உரையை நிறைவு செய்தார். 
அடுத்து மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் உண்ணா நோன்பின் காரண காரியங்களை விளக்கிப் பேசி ஒற்றுமையுடன் செயல்பட வலியுறுத்தினார். 
பிறகு தோழர்கள் இருதயராஜ், என் பாலசுப்பிரமணியன் 2, நடராஜன், கைலாசம், புருஷோத்தமன், அய்யனார், ஆறுமுகம் தோழியர் தங்கம் சேவியர், மல்லிகா சுகுமாரன், ஆகியோர் நமது சங்கத்தின் செயல்பாட்டினையும், உண்ணா நோன்பின் அவசியத்தையும் நாம் ஒற்றுமையுடன் சாதிக்க வேண்டிய செயல்கள் பற்றியும்  உரை நிகழ்த்தினார்கள். 
சரியாக  மதியம்  12 முப்பதுக்கு  கோஷங்கள்  தோழர்கள் பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் மற்றும் தஞ்சை கே சந்தானகோபாலன் சங்கத்தின் கோஷங்களை முழங்கிட அனைத்து உறுப்பினர்களும் விண்ணதிர கோஷமிட்டு சிறப்பிதார்கள்.
மதியம் தோழர்கள் சந்தான கோபாலன், நடராஜன் ,மாவட்ட தலைவர் ஏ கே  டி மற்றும் மாவட்ட செயலர் சாமிநாதன் அனைவரும் நமது ஆரம்ப காலத்திலிருந்து அதாவது பி அண்ட் டி காலம் தொட்டு  இன்றைய பிஎஸ்என்எல் வரை நடந்த சங்கங்கள் அமைப்பினையும் செயல்பாடுகளையும் விளக்கி கூறியதோடல்லாமல் இன்றைய நிலையில் நாம் ஒரு சீனியர் சிட்டிசன் ஆக செயல்படவேண்டிய காரண காரியங்களையும் விளக்கிப் பேசினார்கள். 
மதியம் தோழர் ஜெயபாரதி அவர்கள் நகைச்சுவையோடு உரையாற்றி உண்ணாவிரத போராட்டம் வெற்றிபெற  உரை நிகழ்த்தினார்கள். 
மழை புயல் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகம் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருப்பார்கள் என்ற ஒரு குறையை தவிர உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. 
அய்யனார் உண்ணாநோன்பு போராட்டத்தின் தீர்மானத்தை வாசிக்க அனைவராலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 
அந்த தீர்மானம் மத்திய சங்கத்தின் ஆணைப்படி DOT க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
சரியாக மாலை 5 மணிக்கு தோழர் பிரான்சிஸ் சேவியர் உண்ணா நோன்பினை முடித்து வைத்தார். 
தோழர் கே .சீனு பொருளாளர் நன்றி கூறி போராட்டத்தினை நிறைவு செய்தார். 

போராட்டக் காட்சிகள்:




















No comments:

Post a Comment