LIVE

Wednesday, January 23, 2019

 வி. சாமிநாதன், மாவட்டச் செயலர், தஞ்சை.
==============================================

மத்தியில் மாண்புமிகு ஏ.பி. வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது, ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தினார்கள். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் ஜனநாயக சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் அன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது.

வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு துறையை உருவாக்கி அதற்கு "பொதுத்துறை பங்கு விற்றல் துறை"உருவாக்கப்பட்டு அதற்கு மாண்புமிகு அருண்ஷோரி அவர்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். நம்முடைய தொலை தொடர்புத் துறையை, பொதுத்துறை நிறுவனமாக மாற்ற அரசு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது. அப்பொழுது மரியாதைக்குரிய நம் அனைவரின் நினைவுகளில் வாழும் தோழர் ஓ.பி.குப்தா NFTE, தோழர் கே. வள்ளிநாயகம் FNTO, தோழர். மல்லிகார்ஜுனா BTEF  பொதுச்செயலாளர்களாக இருந்தனர். மேலும் JETA, TESA, மற்றும் ITS அதிகாரிகள் சங்கங்களும் இருந்தன. அப்போது,தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக மாண்புமிகு ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள் இருந்தார். பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முயற்சியை அனைவரும் எதிர்த்தனர், ITS அதிகாரிகளை தவிர. மத்திய அரசு திடீரென்று ஒரு நாள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் மும்பையையும் டெல்லியையும் இணைத்து, MTNL என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் DOT, DPS அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்கங்கள் எல்லாம் பொதுத்துறை நிறுவனமாக ஆக்குவதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசுத் தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் DOT இல் பணியாற்றிய காலத்திற்கு மட்டும் ஓய்வூதியம் தரப்படும், பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்ட பிறகு அனைவரும் புதிதாக பணியில் அமர்த்தப்பட விருப்பம் தெரிவிக்க வேண்டும், பொதுத்துறையில் பணியாற்றுவதால் ஓய்வூதியம் கிடையாது,  இது மத்திய அரசின் கொள்கை முடிவு, இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நம் தலைவர்கள் ஒன்று கூடி மூன்று சம்மேளனங்களின் சார்பாக 2000 ம் ஆண்டில் செப்டம்பர் 6 முதல் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை கொடுத்தனர்.   அரசாங்கம் தொழிற்சங்க தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாண்புமிகு அமைச்சர்களான ராம்விலாஸ் பாஸ்வான், S.N. சின்ஹா, மத்திய நிதியமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முரசொலி மாறன், க்ஷாட்டியா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகிய 5 பேர்கள் கொண்ட அமைச்சரவை குழு  நியமிக்கப்பட்டது. போராட்ட அறிவிப்புக்கு பின் அறிவிக்கப்பட்ட ஐவர் குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொலைத்தொடர்பு துறையில் ITS அதிகாரிகளை தவிர அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செப்டம்பர் 6  நள்ளிரவில் தொடங்கிய போராட்டத்தில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டார்கள். அரசின் அறிக்கையின்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 95% ஆகும். நாம் போராட்டம் துவங்கிய நேரத்தில் நம்முடைய பிரதமர் மாண்புமிகு ஏ.பி. வாஜ்பாய் அவர்கள் வாஷிங்டனில் அன்னிய முதலீட்டார்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்தார். முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீடு செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் அமைதியான சூழல் இந்தியாவில் உள்ளது. எனவே, இந்தியாவில்  தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அந்தக் கூட்டத்திற்குப்  பிறகு உலக நிருபர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் தொலை  தொடர்புத் துறையில் நடைபெற்றுவரும் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பாஸ்டன் நகரிலிருந்து ஒரு நிருபர் NFTE சம்மேளன அலுவலகத்தை தொடர்புகொண்டு தோழர் ஓ.பி. குப்தாவிடம் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றார். தோழர் ஓ.பி. குப்தா அவர்கள் வேறு முக்கிய பணியில் இருந்த காரணத்தால் தோழர் கே. வள்ளி நாயகத்திடம் பேசுமாறு நிருபர்களிடம் கேட்டுக்கொண்டார். தோழர் ஓ பி குப்தா அவர்கள் இந்த செய்தியினை தோழர் வள்ளி நாயகத்திற்கு தெரியப்படுத்தினார். தோழர் வள்ளிநாயகம் குப்தாவின் ஆலோசனையின் பேரில் பாஸ்டன் நிருபரிடம் போராட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்.
இதற்கிடையில் போராட்டம் துவங்கியபின், BTEF சம்மேளன பொதுச் செயலாளர் தோழர் மல்லிகார்ஜுனா அவர்கள் அவசர பணிகள் இருப்பதாக கூறிவிட்டு, தோழர் எஸ்.பி.ஷர்மா என்பவரை சம்மேளனம் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார் என்று சொல்லிவிட்டு ஆந்திராவிற்கு சென்று விட்டார். பின்  ஏழாம் தேதி மாலையில் பி ஜே பி -இன் தூண்டுதலால் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது  என அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளியிட்ட பிறகு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் எண்ணிக்கை 99% ஆக உயர்ந்தது. வாஷிங்டனில் நிருபர் கூட்டத்தில் இருந்த பாரதப்பிரதமரிடம் பாஸ்டன் நிருபர் இந்தியாவில் இரண்டு நாட்களாக தொலைதொடர்பு துறையில் நடைபெறும் போராட்டத்தால் தொலைதொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.

பாரதப் பிரதமர் அவர்கள், அமைச்சரின் செயலாளராக இருந்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி திரு. நாராயணன் அவர்களை தொடர்பு கொண்டு தொலை தொடர்பு துறையில் நடைபெறும் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார். உடனடியாக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை குழுவினருடன் நம்முடைய தலைவர்கள் ஓ பி குப்தா NFTE, கே வள்ளிநாயகம் FNTO, எஸ். டி. ஷர்மா BTEF ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். பேச்சுவார்த்தையில் CCS PENSION தான்,  அனைவரும் BSNL  க்கு விருப்பம் தெரிவிக்க வேண்டும். CCS PENSION  விதிப்படி 1972 திருத்தம் சரி  செய்யப்பட்டு பணிக்காலம் முழுமைக்கும் ஓய்வு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதுவும் மத்திய அரசின் CONSOLIDATED FUND OF INDIA  விலிருந்து (ஓய்வூதிய தொகுப்பு நிதி),  ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உத்திரவாதத்தை எழுத்துப் பூர்வமாகவும், பாராளுமன்ற ஒப்புதலோடும், மத்திய  அரசிதழில் வெளியிட்டு அனைத்து விதமான பாதுகாப்புகளையும் நமக்கு பெற்றுத் தந்தார்கள். ஒப்பந்தத்தில் NFTE சம்மேளத்தின் சார்பாக தோழர் ஓ.பி. குப்தா, FNTO சம்மேளன செயலாளர் இளம் தலைவர் தோழர் கே. வள்ளிநாயகம்  மற்றும் BTEF சார்பாக தோழர் S.D. ஷர்மா அவர்களும் வரலாற்றுச்  சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இன்று நாம் ஓய்வூதிய பலன்களை அனுபவித்து வருகின்றோம். இந்த வெற்றியை உறுதியோடு போராடிய தோழர்களுக்கும், நம்மை வழி நடத்திய தலைவர்களுக்கும் சமர்ப்பணம் செய்வோம். 
சேலம் தோழர் ரமணி குறிப்பிட்டதைப் போல அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நல சங்கம் பல ஊர்களிலிருந்து சங்கமிக்கும் "ஓர் பறவைகளின் சரணாலயம்."  இந்த சரணாலயம் அமைந்த இடத்தில் உள்ள மக்கள் விருப்பு, வெறுப்பு, சந்தோஷங்களை புறந்தள்ளி பண்டிகை காலங்களில் வெடிகளை கூட வெடிக்க மாட்டார்கள். 
வெடி வெடித்தால் பறவைகள், சரணாலயத்தில் ஒன்றாக இருக்க முடியாது என்பதால்...

அன்பு நண்பர்களே! அனைத்து தலைவர்களையும் நினைவில் கொள்வோம். அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தில் அனைவரையும் மனமுவந்து ஒன்றிணைப்போம்.  செயல்படுவோம்.

வாழ்த்துக்களுடன்,

வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
AIBSNLPWA, தஞ்சை.

1 comment:

  1. வணக்கம்.
    முதலில் சங்கத்தின் பெயர் என்ன என்பதை தெளிவுபடுத்தவும்.
    சந்தா/நன்கொடை ரசிதுகளில் DOT/BSNL ஓய்வூதியர் நலசங்கம்--தஞ்சாவூர் மற்றும் ALL INDIA TELECOM PENSIONERS EELFARE ASSOSIATION--THANJAVUR என இரட்டைவேடம் போடுவதை நிறுத்திவிட்டு AIBSNL PWA-என சந்தா/நன்கொடைக்கான ரசீது போட்டுவிட்டு பேசவும். உறுப்பினர்களுக்கு ஏன் மாவட்ட நிர்வாகிகளுக்கே தன்னுடைய சங்கம் எது என்றநிலையே இப்போது உள்ளது. காரைக்குடியில் 2017-NOV-25 ,26 தேதிகளில் நடைபெற்றAIBSNLPWA தமிழ் மாநில செயற்குழுவில் தஞ்சை மாவட்டகிளை தனது பெயரை பதிவு செய்யப்பட்ட மத்திய சங்க பெயரான அகில இந்தியBSNL ஓய்வூதியர் நல சங்கம் என ஆறு மாதத்திற்குள் மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. (AIBSNLPWA மாநில சங்க சுற்றறிக்கை எண்- 16-Dated 6-12-2017 )12-மாதத்திற்கும் மேலாகியும் மாற்றாமல் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக்கொள்ளவும்.

    ReplyDelete