இன்று மதியம் சரியாக 2:30 மணி
அளவில் இந்த ஆண்டிற்கான முதல் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எம். ராஜேந்திரன் தலைமையில்நடைபெற்றது.
40க்கும் மேற்பட்ட தோழர்களும், தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செயலர் தனது முன்னுரையில் வருகின்ற
14-3-2019 வியாழக்கிழமை தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கல்லுகுளம் பகுதியில்
அமைந்துள்ள மக்கள் மன்றத்தில், நடைபெற இருக்கும் உலக மகளிர் தினம், மத்திய சங்க தலைவர்கள் பாராட்டு விழா, மற்றும் உறுப்பினர்கள் குடும்ப
விழா நடத்துவது பற்றியும், அது சம்பந்தமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்காக இந்த செயற்குழு கூட்டம் கூட்டியிருப்பதாகவும் அங்கத்தினர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளை கூறுமாறு
அழைப்பு விடுத்தார். மாவட்ட தலைவர், கௌரவத்
தலைவர், செயல் தலைவர், மாநில சங்க அமைப்பு செயலாளர், மாநில
சங்க துணைப் பொருளாளர் மற்றும் கூடியிருந்த
அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
தோழர்கள் பிரின்ஸ்,
பி எஸ் மூர்த்தி, அய்யனார், சிவசிதம்பரம், தோழியர் செந்தாமரை, பத்மினி, மல்லிகா சுகுமாரன்
ஆகிய உறுப்பினர்களை கொண்ட திட்டமிடுதல் குழுவை அனைத்து உறுப்பினர்களின்
ஒப்புதலோடு செயலர் சாமிநாதன் அமைத்தார்.
வருகின்ற பிப்ரவரி மாதம்
இரண்டாம் சனிக்கிழமை நடக்கின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில்
குழந்தைகளுக்கான போட்டிகளை
நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தவிரவும் 14-3-2019 அன்று காலையில் நமது மத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மகளிர் தின விழா நடத்துவது என்றும், மதிய உணவிற்குப்பின் சென்ற
19-9-1968 ல் நடைபெற்ற பெருமைமிகு போராட்டத்தில் பங்கு
பெற்றவர்களை சிறப்பிப்பது மற்றும் குடும்ப
விழாவிற்கான போட்டிகளை நடத்தி சிறப்பாக
கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் விழாவிற்காக தாமாக முன்வந்து நன்கொடைகளை வழங்கலாம் என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
மன்னார்குடி தோழர் கலியமூர்த்தி அவர்கள் ரூபாய் 501 முதன்முதலாக
நன்கொடை கொடுத்து ஆதரவு நல்கினார்.
தோழர் கைலாசம் ஒரு போட்டிக்கான 3 பரிசுகளை தான் தருவதாக உறுதியளித்தார்.
இந்தக் கூட்டம் சம்பந்தமான முடிவுகளை
அவ்வப்பொழுது குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து வழி
வகுத்திட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக தோழர் K. சீனு மாவட்ட பொருளாளர் நன்றி
கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
தோழமையுடன்
வி. சாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
தஞ்சை.

No comments:
Post a Comment