LIVE

Wednesday, January 15, 2020

*********************************
  புத்தாண்டு மற்றும் 
     பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
=============================
உழைப்பவன், உழுபவன் 
உலகிற்கோர் வரம்! -அதை 
உணர்ந்து வாழ்ந்திடல் 
நல்லோரின் தரம்.

கூட்டாய், குடும்பமாய் 
வாழ்ந்தவர்கள் நாம்! - அந்தக் 
கூட்டைக் கலைப்போரை
கொல்ல வேண்டாம்!  
கொட்டித் தீர்ப்போம், தேனீக்களாய்!

வளர்ந்த தேசம்  இந்தியா!
வல்லோர்களின் வழியில், வலியில் 
வாழ்வு பெற்றவர்கள் நாமெல்லாம்.
இனியுமா இப்படி! என்பதே கேள்வி.
வருந்திட வேண்டாமென்றால் 
திருந்திட வேண்டுமன்றோ!

தமிழ் கூறும் நல்லுலகின் 
திருவள்ளுவர் ஆண்டு 
துவங்கியது தையிலே! -அதைக்
கொள்வோம் நாம், சிந்தையிலே!  

ஆண்டின் ஆரம்பம் 
அறுவடை ஆகிடும்.
புத்தாண்டும், பொங்கலும் 
இணைந்து வரும் தையிலே 
நம் பிள்ளைகள் சிந்தையும் 
செழுமையுற விரும்புவோம்.

என்ன நிலை எடுப்போரும் 
என்ன விலை கொடுப்போரும் 
சொந்த தேச மக்களே!
இந்த நிலை வாரா வண்ணம்
மனங்களை ஊடுருவி,
மந்த நிலை போக்கிடுவோம்!

அனைவருக்கும் இனிய பொங்கல், 
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன் உங்கள்,
எஸ். சிவசிதம்பரம்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Tuesday, December 24, 2019

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த 
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 
அன்புடன்,
உங்கள் V. சாமிநாதன்.

Thursday, December 12, 2019

ஓய்வூதியர் தின சிறப்புப் பொதுக்குழு 





Wednesday, August 14, 2019

அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்!

Saturday, August 3, 2019

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கம்.
தஞ்சாவூர்.
====================================================
அகில இந்தியச் சங்க  அமைப்பு தினம்  
பத்தாம் ஆண்டு சிறப்புக் கூட்டம்.
[ 20-08-2009 ]
======================================
10-08-2019 சனிக்கிழமை காலை 10 மணி 
மேரிஸ் கார்னர் தொலைபேசி இணைப்பகம்.
====================================================
தலைமை: சமூக ஆர்வலர்
 தோழர். மதுரை ராஜேந்திரன் அவர்கள் 
மாவட்டத் தலைவர்.

முன்னிலை தோழர்கள்: 
A. K. தனபாலன் மற்றும் S. பிரின்ஸ் செயல் தலைவர். 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 
தோழர். க. அய்யனார் அவர்கள்.

வரவேற்புரை 
தோழர். எஸ். சிவசிதம்பரம் 
பட்டுக்கோட்டை.

துவக்கவுரை;
தோழர். V. சாமிநாதன் அவர்கள்,
மாவட்டச் செயலாளர்.

சிறப்புரை: தோழர்கள் 

N. வீரபாண்டியன் அவர்கள்
சிறப்பு ஆலோசகர், பட்டுக்கோட்டை.

S. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 
மாநில அமைப்புச் செயலர், தஞ்சாவூர். 

T. முருகேசன் அவர்கள்,
மாநில துணைப் பொருளர்.
திருவாரூர்.

C. V. தங்கையன் அவர்கள்
பட்டுக்கோட்டை 

நன்றியுரை 
தோழர். K. சீனு அவர்கள் 
மாவட்டப் பொருளாளர்.
================================================================
தோழர்கள், தோழியர்கள் தவறாது பங்கு கொண்டு 
நிகழ்ச்சியை சிறக்கச் செய்யுமாறு 
அன்போடு வேண்டுகிறோம்.
===================================================================
சங்கப் பணியிலும், சமுதாயப் பணியிலும் 
என்றும் முனைப்பாய் நிற்கும் நமது 
தஞ்சை மாவட்டச் சங்கம் 
உங்களை அன்போடு வருக! வருக!! வென 
 வரவேற்று மகிழ்கிறது!!
===================================================================

Monday, July 29, 2019

               சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் 
 28-07-19 - தஞ்சை.
==========================================
தஞ்சை ராஜசேகரன் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமையில் மாலை 4 மணிக்கு சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்டச் செயலர் தோழர். சாமிநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். 
தோழர். வீரபாண்டியன் அவர்கள் 
துவக்கவுரையாற்றினார். 

ஓய்வூதிய மாற்றம், MRS மற்றும் இன்றைய BSNL என்ற தலைப்பில் சிறப்பானதொரு விளக்கவுரையினை அகில இந்திய துணைத் தலைவர் தோழர் D.G அவர்கள் ஆற்றினார்.
ஒன்றரை மணி நேரம் கூட்டத்திற்கு வந்திருந்த 300 பே ரையும் கட்டிப் போட்டார் தலைவர். 

அவருடைய முழு உரையும் ஆடியோ பதிவாக விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.

 



Thursday, July 25, 2019

நீண்ட நாள் கோரிக்கை வெற்றி!
===========================================================
அகில இந்திய தலைவர்கள் D.G, கங்காதரராவ், 
மாநிலச் செயலர் தோழர். RV, மற்றும் தஞ்சை
GM திரு. வினோத் ஆகியோருக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றி! 
============================================================

AIBSNLPWA தஞ்சை மாவட்டச் சங்கத் தோழர்களின் இரண்டு 
சிக்கலான பென்சன் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

1
அய்யம்பேட்டை தோழர். பிச்சையன் TM அவர்களின் மனைவிக்கு இன்றைக்கு பென்சன் உத்தரவாகி நிலுவைத் தொகை ரூ. 15,65,000/- வழங்கப்பட்டுள்ளது.
பிச்சையனுக்கு 1984 ல் திருமணம். மகன் பிறந்த 4 மாதத்திலேயே மனைவி இறக்க, 85 ல் மறுமணம் செய்கிறார். 86 ல் TM ஆக வேலை பார்க்கிறார். 2வது மனைவிக்கு 6 குழந்தைகள். 2012 ல் பிச்சையன் இறந்து விடுகிறார்.
அப்போது 33 வயதான முதல் மனைவியின் மகன் இந்தப் பென்ஷன் தொகையில் சமமான பங்கு வேண்டும் என்று வழக்கு போடுகிறார். கேபிள் டிவி தொழில் நடத்திக் கொண்டிருக்கும் இவரது மனைவி வல்லத்தில் ரெவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கிறார்.  முதல் மனைவியின் இறப்புச் சான்றிதழ் பெறமுடியாத நிலையில் நம்ம GM ஆல் பென்ஷன் பேப்பர் அனுப்ப முடியவில்லை. அதற்கு பல முட்டுக்கட்டைகளைப் போடுகிறார் முதல் மனைவியின் மகன்.

அந்த அம்மாவுக்காக நமது GM அவர்கள் RDO வுக்கு கடிதம் எழுதி புகார் செய்த பின்தான் இந்தச் சான்று கிடைக்கிறது. அதற்குப் பிறகு GM சான்றளித்து, பென்சன் பேப்பரை அனுப்பினால் கோர்ட் கேஸை முடித்து வாருங்கள் என்று பதில் வருகிறது. முதல் மனைவியின் மகன் கேஸை டிரையலுக்கு வராமலேயே இழுத்தடிக்கிறார்.  அப்போது நான் அந்தப் பையனிடம் சென்று சமாதானம் பேசிப் பார்த்தேன். முடியவில்லை. 

பின்னர் நாம் நடத்திய மகளிர் தின விழாவிற்கு நமது அகில இந்திய துணைத் தலைவர் DG அவர்களும் GM அவர்களும் வந்திருந்தார்கள். அதில் GM அவர்கள் பேசியபோது, மேற்படி கேஸ் பற்றி சுட்டிக் காட்டி 6 குழந்தைகளோடு கைம்பெண்ணாக வாழும் மனோன்மணி என்ற பெண்ணுக்கு நடந்த அநியாயத்தை விவரித்து, இதை இங்கு வந்திருக்கும் திரு DG அவர்கள் மெம்பர் பைனான்ஸ்க்கு எழுதி அந்த அம்மாவுக்கு பென்ஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். நமது தோழர் மீது அவர் காட்டிய பரிவு அன்று அனைவரையும் நெகிழச் செய்தது.

உடனேயே தலைவர் DG அவர்கள் திரு. கங்காதரராவ் அவர்களிடம் கூறி அ.இ. சங்கத்தின் மூலம் கடிதம் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார். 
பின்னர் ஒருமுறை மெம்பர் பைனான்சும், DDGP லிண்டா மேடமும் பெங்களூர் வரும்போது கங்காதரராவ் இதைப் பற்றி கூறி, அழுத்தம் கொடுக்கிறார். உடனே அந்த அம்மையார் அந்தக் கேஸை உடனே முடித்து வைக்கச் சொல்லி SETTLE IMMEDIATE என்று உத்தரவிடுகிறார். பின் டெல்லி சென்று, ஏன் இந்த பென்சன் கேஸை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று 2 பேரை விசாரிக்க நியமிக்கிறார்.

அதன் பின்னர்தான் 26 ம் தேதி ஆர்டர் போடப்பட்டது. ஆனால் இந்தத் தபால் அந்த அம்மாவிற்கு செல்ல விடாமல் முதல் மனைவியின் மகனால் தடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பின்னர் நமது மாவட்டச் செயலர் சாமிநாதன் அவர்கள் போஸ்ட் மேனைச் சந்தித்து, உங்கள் நடவடிக்கை குறித்து நான் புகார் செய்வதற்குள் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்தார். பின் 2 தபால்களை  ஒரே நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின் மாநிலச் செயலர் தோழர். R.V மூலம் PPO எண்ணைப் பெற்று, பேங்கில் வாழ்நாள் சான்றிதழ் கொடுத்து கையோடு UPLOAD செய்ய வைத்தார். 

2
கீவளூர் தோழர் பாலசுப்ரமணியன் மனைவி பிரேமா. இவர் 2009 ல் இறக்கிறார். இவர் மகன் அருள்செல்வன் ஊமைப் பையன். பின் இந்த பையனுக்கு திருமணம் ஆனதால் கிடையாது என்றார்கள்.   இவருடைய கேசும் 10  ஆண்டாக இழுத்தடிக்கப்பட்டது. இதையும் அதாலத்தில் வைத்து போராடினோம்.
பின்னர் திருமணம் ஆனாலும் ஊமைப் பையன் என்றால் பென்சன் உண்டு என்று உத்தரவு வந்தது.  அதை ஒட்டி நமது முயற்சிகளை விடாது தொடர்ந்தோம். கடைசியாக இந்த 24 வது அதாலத்தில் இன்றைக்கு அது தீர்க்கப்பட்டிருக்கிறது.   இவருக்கு இன்று 10 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் நிலுவைத் தொகையாக  7,84,000 ரூபாயினை நமது சங்கம் பெற்றுத் தந்து, பென்சனை வழங்கியிருக்கிறது. 

ஒரு உதாரணத்திற்காக இந்த 2 பிரச்சினைகளை சுட்டிக் காட்டியிருக்கிறோம். நோக்கம் வேறொன்றுமில்லை. நமது முயற்சிகளைப் பற்றிய பின் புலத்தை நீங்கள் அறிந்து கொள்ளவே!

மாவட்டச் சங்கம் என்ன செய்கிறது, கேஸை ஒழுங்குபடுத்தி அதாலத்தில் எப்படி முன் வைக்கிறது, வாதிடுகிறது?

நமக்கு மதிப்பளித்து தஞ்சை GM அவர்கள் இந்த பிரச்சினையை எவ்வாறெல்லாம் கையாண்டார்?

நமது அகில இந்திய தலைவர்கள் DG, கங்காதரராவ் ஆகியோர் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்?

மாநிலச் செயலர் தோழர் RV அவர்கள் தஞ்சைப் பிரச்சினையில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்?  அதாலத்தில் நமக்காக விவாதம் செய்கிறார்?

என்பதில் உள்ள உண்மையை, உழைப்பை, அக்கறையை நாமெல்லாம் உணர்ந்திடவே இந்தப் பதிவு. யாதொரு விதமான ஆதாயமும் இல்லாமல் தினசரி சங்கத்திற்கு வந்து எத்தனை தோழர்கள், பொறுப்பாளர்கள் உழைக்கிறார்கள், கூட்டத்தை நடத்தித் தருகிறார்கள் என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும். இவைகளுக்கெல்லாம் காரணம் நமது அப்பழுக்கற்ற செயல்பாடுதான் என நான் உணர்வதால் இதைப் பதிவு செய்கிறேன்.  

தோழர்களே!
தோழர் DG அவர்கள் வருகிற 28-07-19 தஞ்சைக்கு வருகிறார். அழைப்பிதழ் பார்த்திருப்பீர்கள்.  அவசியம் வாருங்கள். தவறாது பங்கு கொண்டு சிறப்பியுங்கள்.

வாழ்த்துக்களுடன்,
V. சாமிநாதன்,
மாவட்டச் செயலர்,
AIBSNLPWA, தஞ்சை.